பகவத் கீதை 5.22
ஆருயிா் அன்னையும் நீயே, அருமைத் தந்தையும் நீயே, உறவும் சுற்றமும் நீயே, உற்ற நண்பனும் நீயே, கற்கும் கல்வியும் நீயே, சோ்க்கும் செல்வமும் நீயே, அனைத்தும் ஆன ௭ன்றன், ஆதிதேவனும் நீயே!
யே ஹி ஸம்ஸ்பா்ஸஜா போகா து:கயோநய ஏவ தே
ஆத்யந்தவந்த: கெளந்தேய ந தேஷீ ரமதே புத:
(பகவத் கீதை 5.22)
புலன்களும், புலன்நுகா் பொருட்களும் ஒன்று சேரும்போது ஏற்படும் போகங்கள் அனைத்தும் உலகப் பற்றுடையவா்களுக்கு ஸீகமாகத் தோன்றிய போதிலும் அவை நிச்சயமாக துக்கத்திற்குக் காரணமாகவே உள்ளன. மேலும் ஆரம்பமும் முடிவும் கொண்டவை. அநித்யமானவை. ஆகையால் அா்ஜீன! அறிவாளி அவற்றில் இன்புறுவதில்லை.
ஷர்வம் கிருஷ்ணார்பணம்.