Illuppaikudi Temple - Kongani Siddithrai Workship

இலுப்பைக்குடி கோவிலில் கொங்கணசித்தர்!


 திருப்பதியில் ஏன் சொர்ண மழையும் பண மழையும் பொழிகின்றது என்று தெரிந்து கொள்ளுங்கள்  ! இந்தியா,தமிழ்நாடு ,சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகருக்கு 6 கி.மீ அருகே உள்ள மாத்தூர் மற்றும் இலுப்பைக்குடி கோயில்களில் கொங்கணசித்தர் தங்கமாக மாற்றுகிற வரலாறு ! கொங்கணசித்தர் தமது கடும் முயற்சிக்கு பிறகு தமக்கு கிடைத்த மூலிகையை பயன்படுத்தி இரும்பை தங்கமாக மாற்றுகிறார்.இலுப்பைக்குடி கோயிலுக்கு அருகில் உள்ள மாத்தூர் ஐநூற்றீஸ்வரர் கோவிலில் அவருக்கு அப்படி அவர் செய்த தங்கம் 500( Touch) மாற்றுக்கள் தரம் உடைய தங்கம் தான் கிடைத்தது .அதனால் தான் மாத்தூர் கோவிலில் தங்கம் 500( Touch) மாற்றுக்கள் தரம் கொண்ட தங்கமே கிடைத்ததால்மாத்தூர் கோவிலில் ஐநூற்றீஸ்வரர் என சுவாமி அழைக்கப்படுகிறார் .இன்று நாம் பெரும்பாலும் பயன்படுத்துவது 91.6 (touch ).ஆனால் கொங்கணரோ அன்றே 500( Touch)க்கு சென்றுவிட்டார். 500( Touch) மாற்றுக்கள் தரம் கொண்ட தங்கத்தில் திருப்தி அடையாத கொங்கணர் மேலும் இன்னும் தகதகவென மேலும் அதிக தூய்மையான மாற்றுக்கள் தரம் கொண்ட வேண்டுமென்று சிவபெருமானை நோக்கி தவம் இயற்றுகிறார்.சித்தர் அல்லவா .சிவனும் மனமிறங்கி அதோ அங்கே இலுப்பைக்குடியில் இலுப்பை மரமும் வில்வ மரமும் நிறைந்த அந்த இடத்தில் பைரவரை நினைத்து 1000 ( Touch) மாற்றுக்கள் உள்ள தங்கத்தை தயாரிக்க அருள்செய்கிறார்.கொங்கணரும் மிக சரியாக இந்த வில்வமரம் மற்றும் இலுப்பைமரங்கள் நிறைந்த இடமான இலுப்பைக்குடியில் ஸ்வர்ணாகர்ஷன பைரவர் ஆசியுடன் 1000 ( Touch) மாற்றுக்கள் உள்ள தங்கத்தை தயாரித்துவிட்டார்.அந்த தங்கமோ தகதகவென ஜோதியாக மின்னுகிறதாம் .அப்போதும் திருப்தி அடையாத அவர்இன்னும் பிரகாசமாய் தங்கம் மாற்று அதிகமாக வேண்டுமென்று முயற்சி செய்த போது அதுஅப்படியே பூமிக்குள் சென்று ஜோதியாக சிவலிங்கமாக சுயம்பிரகாசேஸ்வரராக காட்சியளித்து தான் தான் உச்சகட்ட ஜோதி பிரகாசம் என்று கொங்கணருக்கு அறிவுறுத்தி அருள்பாலிக்கின்றார் .இப்படி பிரகாசமாக ஜோதியிலிருந்து தோன்றியதால் இலுப்பைக்குடி கோவில் ஸ்வாமிக்கு சுயம்பிரகாசேஸ்வரர் என்றும் ,தான்தோன்றிஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள்.மிக பழமையான பைரவர் தலங்களுள் இதுவும் ஒன்று.ஒரு புறம் இரும்பு மறு புறம் அதன் உச்சம் ஜோதி பிரகாசமாக இறைநிலை.இதற்குமேல் பிரகாசம் கிடையாதல்லவா ? ஆக கொங்கணசித்தர் மனம் இறைவசப்பட்டு உணர்ந்து ஞானம் பெற்று இறைவனைவிட மிஞ்சிய சுயம்பிரகாச ஜோதி 1000 கோடி சூர்யப் பிரகாசத்திற்கும் அதிகமாக ஜொலித்ததை கண்டு இனி இறைவனே பரிபூரணஜோதி என்று உணர்ந்து சித்தி வாய்க்கப் பெற்று ஞானம் பெற்று பின் வாழ்க்கை சக்கரம் சுழன்று பல இடங்களுக்கு சென்று இறுதியில் திருப்பதியில் ஜீவசமாதி அடைகின்றார் மாத்தூர் கோவிலில் தங்கம் 500( Touch) மாற்றுக்கள் கிடைத்ததால் ஐநூற்றீஸ்வரர் என்றும் இலுப்பைக்குடியிலோ1000 கோடி சூர்யப் பிரகாசத்திற்கும் அதிகமாக காட்சி தந்து தானே மிக பிரகாசமானவன் என்று அர்த்தம் உணர்த்தி கொங்கணசித்தர் ஞானம் பெறச் செய்ததால் இலுப்பைக்குடி கோவில் சுவாமி சுயம்பிரகாசேஸ்வரர் என்றும் சுயம்புமூர்த்தம் என்பதால் தான்தோன்றிஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள் .கொங்கணர் சித்தர் "ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரின்" அருளை பரிபூரணமாக பெற்றவர். திருமலை திருப்பதி கருவறையில் பெருமாளுக்கு பாதத்தின் கீழ் ஜீவசமாதி பெற்றவர். கொங்கணரின் அழகிய திரு உருவம் வெகு காலமாக திருமலை பெருமாளின் உள்சுற்று பாதையில் பக்தி சிரத்தையோடு ஆராதிக்கப் பட்டும், மக்களின் தரிசனத்திற்காகவும் அனுமதிக்கப் பட்டது ஆந்திரா முன்னாள் முதல்வர் N T ராமாராவ் முதல்வராக இருந்த போது கொங்கணரின் அருள் கடாக்ஷம் தன் மாநிலத்தை விட்டு வேறு எங்கும் போய்விடக் கூடாது என்பதற்காக கொங்கணரின் திரு உருவத்தை பொதுமக்களின் தரிசனம் செய்ய அனுமதிக்காமல் மறைக்க உத்தரவிட்டார் அதனால் கொங்கணரின் சாபத்திற்கு ஆளாகி அவரின் ஆட்சி,ஆயுள் முடிவுக்கு வந்தது .இப்போதும் அங்கே மறைக்கப் பட்ட கொங்கணர்க்கு வெகு ஜோராக பூஜை நடைபெறுகிறது ஆனால் யாரும் பார்க்க முடியாது அனுமதி இல்லை .பழைய அர்ச்சகர்கள் மற்றும் பெரியோர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் ஆனால் உண்மை இப்போதும் திருப்பதி மூலஸ்தான சுற்று பாதையில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அதிசயமாக இப்போதும் உள்ளது ..கொங்கணர் வேண்டிக் கொண்ட படி திருமலையில் இறைவன் கொங்கணரின் தலையில் கால் வைத்து அழுத்தி பூமிக்குள் சமாதியில் வைத்து அருளினார்..அதனால் தான் திருப்பதியில் மூலவர் இருக்கும் பகுதி முழுதும் பள்ளமாக இருக்கும் என்கிறார்கள் ,.திருப்பதியில் ஏன் சொர்ண மழையும் பண மழையும் பொழிகின்றது என்று இப்போது தெரிகின்றது அல்லவா !

#நன்றி. 

#கட்டுரைஆக்கம் #தேவகோட்டைடால்ஃபின் #AR .ராமனாதன் ,மதுரை ,DEVA#KOTTAI DOLPHIN #AR.RAMANTHAN, MADURAI

Source: Whatsapp

0 Comments